தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
அதன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதியான சவேரியார் புறத்தில் உள்ள பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பட்டா கேட்டு விண்ணப்பம் ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்
முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகனகயா பார்வையிட்டு பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார் அப்போது மனு அளித்த மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான இரண்டு பேருக்கு உடனடியாக ஆணையை எம்எல்ஏ சண்முகையா வழங்கினார் மேலும் ஒரு பெண்ணுக்கு நல வாரியத்துக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது
அதன் பின்பு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சவேரியார் புறத்தில் சரிவர குடிநீர் வரவில்லை சரி செய்து தாருங்கள் என்று பொதுமக்கள் சண்முகையா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர் உடனடியாக அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
அப்போது மாதா நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் சரிவர இல்லை என்று பொதுமக்கள் கூறினார்கள் உடனடியாக யூனியன் ஆணையரை தொடர்பு கொண்டு சாலையை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சண்முகனகயாஎம் எல் ஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நிகழ்ச்சியில் மாப்பிள்ள யூரனி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் ஒன்றிய செயலாளருமான சரவணகுமார். மற்றும் திமுக நிர்வாகிகளான டிடிசி ராஜேந்திரன். ஸ்டாலின். பொன் பாண்டி . பாரதி. தனுஷ் பாலன்உள்ளிட்ட திமுகவினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டன