மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா என இருபெரும் விழா சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ இராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர். சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி .பி . மூர்த்தி, சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து ,சாம்பவர் வடகரை ஐந்தாவது வார்டு தலைவர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுப்பிரமணியன் (எ)பொற்கை பாண்டியன் முப்புடாதி, சுதா ஹரிஹர செல்வன், குட்டீஸ் பரதன் ,பிரதிங்கா, ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.சாம்பவர் வடகரை ஹரி பிரியாணி உரிமையாளர் ஹரிஹர செல்வன் அனைவரையும் வரவேற்றார் .தொடக்க உரையினை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகர கட்டு எஸ். லூர்து நாடார் நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சி .கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா கலந்துகொண்டு அவசரகால ஆம்புலன்ஸ் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, எஸ் .வி .ஜி குரூப் ஆப் கம்பெனி எஸ்.வி. கணேசன் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜ்குமார், ஆயக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார், டி எம்பி வங்கியின் முன்னாள் இயக்குனர் ராஜ்குமார்,நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் மதன் எம். சுப்பிரமணியன், தெக்ஷன மாற நாடார் சங்கம் திருநெல்வேலி தலைவர் ஆர். கே. காளிதாசன் ,வேலன் குரூப்ஸ் கே. டி .கே . காமராஜ் தெக்ஷன மாற நாடார் சங்க இயக்குனர் கோல்டன் பி. செல்வராஜ், எஸ். கே. டி. கே .காமராஜ், வழக்கறிஞர் ராஜன் ஆசீர்வாதம், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் நாடார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மின்னல் ஸ்டீபன் நாடார்,பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் எஸ்பி .கண்ணன், பாவூர்சத்திரம் வணிகர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், டி என். யூ.கூட்டமைப்பின் கல்விக் குழு தென் மண்டல தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் ஜெயகுமார், நாராயண சிங்கம் முன்னாள் கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் அருணோதயம்,சிலம்பம் டிப்ளமோ கல்லூரி வெங்கடம் பட்டி டாக்டர் திருமாறன், வீரவேல் மொபைல் சிவகுருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் துரை.கனக அருண் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சாம்பவர்வடகரை ஹரிபிரியாணி நிறுவனத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.