கரூர் செய்தியாளர் மரியான்பாபு

பாரதிய ஜனதா கட்சியின் இரத்ததான முகாம்..

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் 75 வது பிறந்தநாளினை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த செப்டம்பர் 17 முதல் நடத்தப்பட்டு வருகிறது அதனைமுன்னிட்டு கரூர் மாவட்ட உப்பிடமங்கலத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் மாவட்ட செயலாளர் காவேரி A.மோகன்ராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற குருதிதான முகாமினை கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் தலைமையேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த குருதிதான முகாமில் 60 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு உயிரை காக்கும் உதிரத்தினை தானமாக அளித்தனர்,
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட மண்டல தலைவர்கள்சிந்தியா நடேசன், தாந்தோணி வடக்கு ஒன்றிய தலைவர் பாலுச்சாமி,
தாந்தோணி கிழக்கு ஒன்றிய தலைவர் லட்சுமணன், தாந்தோணி மேற்கு ஒன்றிய தலைவர் விகான் ரமேஷ், கடவூர் வடக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் Ex Army
கடவூர் தெற்கு ஒன்றிய தலைவர் கோபிநாத் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் மாவட்ட துணை தலைவர்கள் ஆறுமுகம் சக்திவேல் முருகன்
மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம்மாள், கற்பக வள்ளி ரகுபதி மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் முருகானந்தம் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் கோபிநாத் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன் வழக்கறிஞர் பிரபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *