கொடிசியாவில் நடைபெறும் அழகு சாதன பொருட்களுக்கான கண்காட்சியில் இடம் பெற்ற வெல்ஸ்லீ நிறுவனத்தின் அரங்கை நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் மனோகரன் திறந்து வைத்தார்..
மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக் குறைவான செயல்முறைகளைக் களைய முழுவதும் இயற்கையான பொருட்களை கொண்டு நாப்கின்களை வெல்ஸ்லீ (VELSLI) எனும் நிறுவனம் தயாரித்து வருகின்றது..
மலிவான விலையில்,அதே சமயத்தில் மூலிகை பொருட்களை கொண்டு தயாரிப்பதால் பெண்கள் இந்த நாப்கின்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்..
இந்நிலையில் கோவை கொடிசியா அரங்கில் அழகு சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகின்றது..
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் வெல்ஸ்லீ நிறுவனம் தனது நாப்கின் மற்றும் பெரியவர்களுக்கான டயாபர் ஆகியவற்றை விற்பனக்க்காக காட்சிபடுத்தி உள்ளனர்..
இந்நிலையில் இந்த அரங்கை நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் மனோகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
வெல்ஸ்லீ நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில்,
பெண்களின் மாதவிடாய் கால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இயற்கையான மூலிகை தாவரங்களின் மூலப்பொருட்களை பயன்படுத்தி நாப்கின்கள் தயாரிப்பதாக கூறிய அவர், வேப்பிலை, கற்றாழை, துளசி போன்ற மூலிகைப் பொருட்கள் சேர்த்து, சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த நாப்கின்கள் உருவாக்கப்படுவதால்,இவை சரும எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தாமல், ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி, பாதுகாப்பான உணர்வை வழங்குவதாக தெரிவித்தார்..
தற்போது கொடிசியாவில் நடைபெறும் கண்காட்சியில் வெல்ஸ்லீ அரங்கில் நாப்கின்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்..
முன்னதாக வெல்ஸ்லி விற்பனை அரங்க துவக்க விழாவில்,வெல்ஸ்லி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் நவீன்,புராஜெக்ட் மேனேஜர் நாதிரா,மற்றும் மேலாளர்கள் செந்தில்,மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்..