கம்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகரின் 31.32.33.
ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு =காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி மேலாளர் ஜெயந்தி
தலைமையில் இங்குள்ள உள்ள கம்பம் குமுளி சாலையில் அமைந்துள்ள ஜி.என்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்க ளுக்கு உடனடி தீர்வாக வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் நகராட்சி பொறியாளர் அய்யனார் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த முகாமில் வழக்கறிஞர் துரை நெப்போலியன் நகரச் செயலாளர் வீரபாண்டியன் சுகாதார அலுவலர் அரச குமார் ஆய்வாளர் சக்திவேல் நகர் மன்ற கவுன்சிலர்கள் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் உள்பட நகர்மன்ற கவுன்சிலர்கள் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்