மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் அக்னி, ப்ரீத்தி, ஆகாஷ், திரிசூல் என்ற பிரிவுகளாக பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
மேலும் விளையாட்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்கும் வகையில் தேசிய மாணவர் படை அணிவகுப்பும் நடைபெற்றது. ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் கோப்பையை அக்னி அணி தட்டிச் சென்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை என்சிசி தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த கர்னல் சி.ஸ்.டி சுவாமி வெற்றி பெற்ற அணிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம், மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
முன்னதாக பள்ளி முதல்வர் டாக்டர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார். சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி நிர்வாக அறங்காவலர் கே. ராமசாமி பள்ளி செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தீபிகா மற்றும் கௌதம் ராம் உட்பட பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக துணை முதல்வர் முனைவர், சக்திவேல் நன்றி கூறினார்