செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் தூய்மையே சேவை – 2025 நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், துணைத் தலைவர் கௌதமி அரிகிருஷ்ணன் தலைமையில் தூய்மையே சேவை இயக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பேரணியை விஜய செல்வி உதவி திட்ட அலுவலர் உட்கட்டமைப்பு ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
தூய்மையே சேவை இயக்கம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுவதைக்
குறித்தும் மாணவர்களுக்கு தன்சுத்த பழக்கங்கள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை மக்காத குப்பை , பசுமை இயக்கம் போன்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சுரேஷ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களால் விளக்கிக் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தூய்மையே சேவை சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்னர் விழிப்புணர்வு பேரணி வேடந்தாங்கல் அரசினர் மேல்நிலை பள்ளியிலிருந்து வளைய புத்தூர் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பசுமை இயக்கம் சித்திரைக்கூடம் தாங்கள் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உடன் சாமிநாதன் ஊராட்சி செயலாளர், சுகாதார ஊக்குனர்கள் மோகனா, குப்பு, சீதா மற்றும் தூய்மை பணியாளர் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.