அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம். சண்முகம் தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க இணை செயலாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் எம் கே ஷேக் தாவூத் நிறைவுறையாற்றினார் மாவட்ட இணைச் செயலாளர் சம்பத் அனைவருக்கும் நன்றி கூறினார் சுமார் இரண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது