திருவெற்றியூர்
மணலி பாடசாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்க பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தொகுதி மேம்பாட்டிலிருந்து ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மணலியில் நடைபெற்றது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் . மணலி வண்டுள்ள ஆணையர் தேவேந்திரன். உட்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியதாவது,கல்வியை முக்கிய கரு பொருளாக செயல்படும் திமுக ஆட்சியில் மணலியில் உள்ள பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிதி வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கூறியதை தொடர்ந்து என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 51 லட்சத்தை மணலி பாடசாலையில் உள்ள பள்ளியில் கட்டிடம் கட்ட வழங்கியுள்ளேன்.
மேலும் பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத வேண்டும் என ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில் இந்த டெட் தேர்வால் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தலின்பேரில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத வேண்டாம் என்ற வாதத்தை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.