திருவொற்றியூரில் உள்ள எம்ஆர்எப் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17வது நாளாக தொடர்ந்து வேல்நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
இன்று எம்ஆர்எப் தொழிற்சாலை வாயிலில் முன்னாள் அதிமுக சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் பேசுகையில் எம்ஆர்எப் தொழிலாளர் பிரச்சினையை இந்த அரசு நினைத்தால் ஒரே நிமிடத்தில் முடித்திருக்க முடியும் திமுக கூட்டணி கட்சியினர் பலர் வந்து இங்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
அவர்கள் முதல்வரிடம் பேசி சரி செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். இந்த தொழிலாளர் பிரச்சினை குறித்து நான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனத்தில் கொண்டு செல்வேன் அவர் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பார் என பேசினார் தொழிலாளர்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.