உலக இருதய தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியம். ஏனாத்தூர் ஒட்டியுள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள சங்கரா செவிலியர் கல்லூரி (மகளிர்), காஞ்சிபுரம் மற்றும் சங்கரா பன்நோக்கு மருத்துவமனை இணைந்து இலவச இருதய மருத்துவ முகாம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவர். சூரிய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருதய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர், இந்நிகழ்வில் சங்கரா செவிலியர் (மகளிர்) கல்லூரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் காஞ்சனா அவர்களின் ஏற்பாட்டில், கல்லூரி ஆசிரியைகள், மாணவிகள் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்றது,
இம்முகாம் மூலமாக இருதய நோயாளிகள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள்.