காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ. 25000 ரொக்கம் மற்றும் 3/4 பவுன் நகை திருடிய நபர் பிடிபட்டார்
திருப்பூர் மாவட்டம், ஊதியூர், நிழலி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 70 என்ற விவசாயின் வீட்டில் கடந்த 20ஆம் தேதி ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 3/4 பவுன் தங்க நகையும் திருடுபோனது. இதனை தொடர்ந்து ஊதியூர் போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பணம் மற்றும் நகையை திருடிய கொழுமங்குலி, தம்புரெட்டிபாளையத்தை சேர்ந்த தங்கசாமி வயது 42 என்பவரை பிடித்தனர். பின்னர் தங்கசாமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.