இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர்.
மேலும்19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம் வகுப்பு முத்துராமலிங்கம் என்ற மாணவன் மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு வருண் என்ற மாணவனும் சாம்பியன் பட்டம் பெற்றனர். இப் பள்ளியின் 22 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகக்குழுவின் செயலர் பாபுசெல்வக்கனி தலைவர் சிதம்பரம், பொருளாளர் பரணிகுமார், உறுப்பினர்கள் இராமர்,ஜெயா மற்றும் தலைமையாசிரியர் மாரிமுத்து பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம் மற்றும் வீரவேல்முருகன் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்