கரூர் செய்தியாளர் மரியான் பாபு
நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்..
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சி தவெக தலைவரும் நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரும் விபத்தால் 39பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் முதல்வர் கூறியதாவது..
கரூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான நெரிசல் விபத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆண் குழந்தைகள் 4, பெண் குழந்தைகள் 5 பேர் அடங்குவர்.13 ஆண்கள், 17பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிகழ்வைத் தொடர்ந்து உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், உயரதிகாரிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நிலைமையை முதல்வர் நேரடியாக அறிந்துகொண்டார். சென்னையில் இருந்து அமைச்சர்கள், டிஜிபி, அதிகாரிகள் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டனர்.
மருத்துவர்கள் மற்றும் அருகிலுள்ள மாவட்ட அலுவலர்களும் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து முதல்வர் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்தார். மேலும்,உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும்,காயமடைந்தோருக்கு 1 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தார்.
விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருங்கிணைந்த விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இழந்த உயிர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மருத்துவமனையில் உள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென இறைவனை பிராத்திக்கிறேன் என முதல்வர் தெரிவித்தார். உடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.