திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதி மாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின்னர், அம்மனுக்கு கும்ப தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.