பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவையில் “புடவை கட்டு – நடையை கட்டு” என்ற தலைப்பில் Radio cityயின் விழிப்புணர்வு வாக்கத்தான் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய புடவை அணிந்து பங்கேற்றனர். பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரப்பும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நடைபயணம், ரேஸ் கோர்ஸ் சாலையில் உற்சாகமாக நடந்தேறியது.
வாக்கத்தானை கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சரவணன் சுந்தர் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக அமைப்புகள், மாணவிகள், பல்வேறு துறைகளின் பெண்கள் எனப் பெருமளவு மக்கள் பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தினர்.
பெண்களின் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றை சமூகத்தில் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வாக்கத்தான், கோவை மக்களின் கவனத்தை ஈர்த்தது.