கரூர் செய்தியாளர் மரியான் பாபு

ஆறுதல் கூறினார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி..
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலின் காரணமாக சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தவர்களில் 16 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 இலட்சமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதனடிப்படையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர்,மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப. தலைமையில், நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, காந்திகிராமம், அன்புநகர், ஏமூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி ரூ.10 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 இலட்சமும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின்போது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி, துணை மேயர் ப.சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *