திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவீரன் பகத்சிங் 119- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர் பெருமன்ற ஒன்றியத் தலைவர் கே.சுதாகர், ஒன்றிய செயலாளர் பி.பாக்யராஜ் ஆகியோர் தலைமையில் மாவீரன் பகத்சிங் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் எஸ். எம்.செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கண்ணையன், ஆர்.சேகர், வலங்கைமான் நகர செயலாளர் பி.ராதா, இளைஞர் பெருமன்ற ஒன்றியத் துணைச் செயலாளர் தமிழ் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.