எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் கொலு திரளான பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இன்நிலையில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது.எட்டாம் நாளான இன்று ஐயப்பன் அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தால். தொடர்ந்து முருகர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவில் பக்தர்கள் பங்கேற்று அம்பாளை வழிபாடு செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.