திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பகுதி நேர வேலை கைநிறைய சம்பளம் ஆசை வார்த்தை கூறி ஆட்டைய போட்ட தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த trans இந்தியா கார்ப்பரேட் என்ற தனியார் MLM நிறுவனம் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம் என கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விளம்பரங்கள் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தது.
இந்த நிலையில் உடுமலை பகுதியைச் சார்ந்த 20க்கும் மேற்பட்டோர் இந்த விளம்பரங்களை நம்பி அந்த தனியார் MLM நிறுவனத்தில் முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு 3000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மீதம் தொகை அல்லது அதற்கான பொருள் விரைவில் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிறுவனத்தினர் தொடர்ந்து கூடுதலாக பணம் செலுத்தும் பட்சத்தில் பகுதிநேர வேலையுடன் அதிகம் ஊதியம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை இரண்டாவது ஆக நபர் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரை முதலீடு செய்ய வைத்துள்ளது ஆனால் அதன் பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு பொருளோ வேலையோ அவர்களுக்கான பணமோ என எதுவும் கிடைக்கவில்லை
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருக்கும் மோகன்ராஜ் மற்றும் வாணி மோகன்ராஜ் ஆகியோரை சந்தித்து நியாயம் கேட்டபோது அடியாட்களை கொண்டு மிரட்டியும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடுத்துக் கொள்ளுங்கள் என அதிகார தோணியில் பேசியுள்ளனர். அதுமட்டுமின்றி மோசமான வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர் தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைத்தால் அதையும் ஏமாற்றி கடன்காரங்களாக மாற்றிய நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.