திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆய்வாளர்கள் முத்து அருணகிரி ஆனந்த செல்வம் சுகம் மருத்துவமனை டாக்டர்கள் அனுராதா பாலாஜி திவ்யா மேலாளர்கள் ஜெ.செல்வராஜ் என்.பால ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, புது வண்ணாரப் பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கான இந்த மருத்துவ முகாம்
திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் உடல்நலம் மற்றும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமில் மேற்கண்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த திரளான காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும், முகாமிற்கு வந்திருந்த அனைத்து காவலர்களுக்கும் சுகம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.