திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, சமுதாய பெருந்தகை எஸ். துரைசாமி நாடார், மக்கள் தொண்டர் டி. கே. பழனிச்சாமி ஆகியோரின் நினைவாக கல்வி ஊக்கப்பரிசு, மற்றும் பட்டதாரிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சங்க மாளிகையில் தலைவர் எம். மதுரை வீரன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் எம். காமாட்சி அனைவரையும் வரவேற்கிறார். பொருளாளர் ஏ. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பனை மர தொழி லாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், நீதிபதி வேல்ராஜ் எம்.எஸ். எம். தியேட்டர் உரிமையாளர் தவமனி, பட்டி மன்ற நடுவர் அவணிமாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமசாமி, தொண்டன் சுப்பிரமணி, ஆசைத்தம்பி, குறிஞ்சி கணேசன், கண்ணன்விநாயகமூர்த்தி, ராமர்முன்னதாக சாந்தி சுப்பிரமணி, மீனாட்சி தங்க பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். முடிவில் துணைச் செயலாளர் இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்