கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தவெக-வின் பரப்புரை 41பேர் பலி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி பேட்டி..
கரூரில் நடைபெற்ற தவெக-வின் பரப்புரை நிகழ்ச்சியில் பலியான சம்பவத்திற்கு முழுமையான, நியாயமான தீர்வு என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும்.எனவும் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு .
எம்.ஆர்.விஜயபாஸ்கர்கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..கரூரில் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரை நடந்த பொழுது எதிர்பாராத விதமாக துயர சம்பவம் நடைபெற்றது.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் வந்து உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறிய கருத்துக்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிணங்களை வைத்து அரசியல் செய்கிறார் என விமர்சித்துள்ளார். அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

27 ஆம் தேதி நடந்த துயர சம்பவத்தில் அன்று மட்டும் 41உயிர்கள் பறிபோனது.அவர்கள் பிரேதங்களை அவர்களின் வீடுகளுக்கோ அல்லது தகனம் செய்வதற்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் 40 ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி தயாராக இருந்தது.அந்த ஆம்புலன்ஸ்களில் சுய விளம்பரத்திற்காக மருத்துவர் அணி கரூர் மாவட்ட திமுக என்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.மேலும் மருத்துவமனையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யப்பட்டது.

(அந்த புகைப்படங்களை ஆதாரமாக உள்ளன. காட்டுகிறார்) ஆம்புலன்ஸ்களை ரெடி செய்வது அரசின் வேலை .ஆனால் இவர்கள் விளம்பரத்திற்காக இந்த வேலையை செய்தார்கள். இவையெல்லாம் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். பிணங்களை வைத்து நாங்கள் (அதிமுக)அரசியல் செய்யவில்லை. உங்கள் திமுக கட்சி தான் செய்கிறது.

அதே போல எங்கள் அதிமுக பொது செயலாளர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை மிரட்டுகிறார் என ஒரு கருத்தை சொல்கிறார். எங்கள் பொது செயலாளர் நடத்தும் பொதுக் கூட்டங்களில் பேச ஆரம்பித்து பத்து நிமிடங்களுக்குள் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வருகிறது.இது கூட்டத்தை கலைக்க நிகழ்த்தும் சதி.ஆம்புலன்ஸ் செல்வதற்கு மாற்று வழிகள் இருந்தும் வேண்டுமென்றே கூட்டத்தை கலைப்பதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. அதனை தீர விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு முழுமையான நியாயமான தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

கரூரில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் முட்டு சந்தில் நடந்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அது முட்டு சந்து என்று உங்களுக்கு தெரிந்த பிறகும் எதற்காக தவெக கூட்டத்திற்கு அங்கு அனுமதி கொடுத்தீர்கள். ஏதாவது அசாம்பாதம் நடக்கட்டும் என்று கொடுத்தீர்களா. அதே போல மிகப் பெரிய கூட்டத்தின் மத்தியில் விஜய் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு ஆம்புலன்ஸ் அதாவது அவர்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் வந்தது.திடீரென ரெண்டு ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குக்குள் எதற்கு வந்தது என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கரூர் வடிவேல் நகர் பகுதியில் ஒரு நபர் கமிஷன் நீதிபதி அருணா ஜெகதீசன், கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் விசாரணை செய்து கொண்டிருந்த பொழுது அங்கு பாதுகாப்பு இருந்த காவல் அதிகாரி எதுவும் சொல்ல கூடாது என பாதிக்கப்பட்டவர்களை சைகை செய்து மிரட்டுகிறார். (அந்த போட்டோவை காட்டுகிறார்) இப்படி விசாரணை நடைபெற்றால் எவ்வாறு நியாயம் கிடைக்கும். சிபிஐ விசாரணை கண்டிப்பாக வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *