போடி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கை தமிழ் செல்வன் எம்பி முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையின் ஒன்பதாவது முகாம் நடைபெற்றது

இந்த முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மின் இதய வரைபடம் எக்கோ அல்ட்ரா சவுண்ட் எக்கோ எக்ஸ்ரே காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் ஆரம்பகட்ட புற்றுநோய் கண்ட அதிகம் பரிசோதனைகளும் மேலும் 15 துறைகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை இதய நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் முகாமில் பங்கேற்ற மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த முகாமில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மருந்து மாத்திரைகள் இலவச ஆலோசனைகள் அடங்கிய பெட்டகங்கள் ஆகியவற்றை வழங்கினார்

இந்த முகாமில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் நகராட்சி நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் எம் சங்கர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் பேரூராட்சி மன்ற தலைவர் கண்ணன் காளிதாஸ் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *