கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் தனியார் கூட்டரங்கில்
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தினர் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு மாநிலத் தலைவர் தேவ.முரளி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கரூர் மாவட்டத் தலைவர் சு.பாரதிதாசன் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர்கள் மா. அதியமான் முத்து, சு.சிவக்குமார், இரா.வெங்கடேசபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்டத் தலைவர்.சு.சண்முக சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலப் பொதுச் செயலாளர் பா.தில்லைக்குமரன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர்
த.அமிர்தரகுமார் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் அமிர்த குமார் தெரிவித்த போது தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வைத்தனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசால் அங்கீகர்க்கப்பட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக இரண்டாவது முறை வெற்றிகரமாக பொறுப்பேற்றுள்ள அமிர்தகுமாருக்கு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.தெரிவித்தனர்.

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தகுதியான அமைச்சுப் பணியாளர்களுக்கு இரண்டு சதவீதம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் வழங்கியமைக்கு தமிழக முதல்வருக்கும், தமிழக துணை முதல்வருக்கும், தமிழக கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழக கல்வித்துறைச் செயலாளருக்கும், தமிழக பன்னிக்கல்வி இயக்குனருக்கும், இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி பணி சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளிக்கல்வி துறையில் நட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளர் பதனி உயர்வு இன்றி பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர்களின் மன வேதனையை போக்கும் நிலையில்,10 ஆண்டுகள் முடிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த நிலையில், ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

தகுதியான இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் பதவி உயர்வுக்கு” காத்திருக்கும் நிலையில் வாய்ப்பு அளிக்கும் வகையில், உடனடியாக நியமன உதவியாளர் நியமனத்தில் 50 சதவீதம் உதவியாளர் பணி நியமனம் செய்யப்படுவதை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக 25% ஆவது நேரடி நியமன உதவியாளர் பணி நியமனத்தை குறைக்கப்படவேண்டும்.


4 வேறு எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு, அரசால் (அரசாணை எண் 595 நிதித் (ஊதியக்குழு) துறை நாள்.01.04.1992) உரிய ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசின் ஆணையை புறந்தள்ளும் விதத்தில், பள்ளிக்கல்வி துறையில் மட்டும் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் பணிக்கு, தகுதியான நிதிக்காப்பாளர்கள் உள்ள நிலையில் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் பணியிட பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.எனவே பணியிட பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசாணை பெற்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவலகங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கு அடுத்தபடியாக நிர்வாக பணியினை மேற்கொள்ள ஏதுவாக நேர்முக உதவியாளர் பணியிடமானது ஏற்படுத்தப்பட்டு அதன்படி அலுவலக நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அதேபோன்று அதைவிட அதிகப்படியான நிர்வாக பணி அதிகமுள்ள மாவட்ட முழுமையும் நிர்வாகிக்கக் கூடிய முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கடுமையான நிர்வாகப் பணியை மற்றும் பெரும் நிதியை கையாள ஏதுவாக நிதி காப்பாளர் நிலையில் அல்லது நேர்முக உதவியாளர் நிலையில் பணியிடத்தினை ஏற்படுத்தி உரிய முறையில் நிரப்பிட வேண்டுகிறோம்.

இவை கல்வித்துறையின் மாவட்ட அளவிலான பெரும் நிர்வாக சிக்கலை தீர்க்க அனுபவ வழியாக இருக்கும்.அமைச்சுப் பணியாளர்களுக்கு இரண்டு சதவீதம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணி மாறுதல் வழங்கும் பொழுது தகுதியான கல்வித் தகுதி பெற்றுள்ள தட்டச்சர்களுக்கும் அவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுகிறோம். தட்டச்சர்ர்கள் தங்கள் பணி நாட்களில் கண்டிப்பாக ஓராண்டு எழுத்தர் பணியை மேற்கொள்கின்றார்.

அதன் அடிப்படையிலேயே அடுத்த பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. எனவே இதை தகுதியாக கொண்டு தட்டச்சர்களுக்கும் இரண்டு சதவீத பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் அளிக்க வேண்டுகிறோம்.

பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கான ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு அடுத்த பதவி உயர்வு என்ன என்று தெரியாமல் மன வேதனையுடன் பணிபுரிந்து வரும் அவர்களுக்கு அதற்கு அடுத்த பதவி உயர்வு வழங்குவதற்கு உரிய அரசு ஆணை பெற்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித் துறையில் பணிபுரிந்து இயற்கை எய்திய ஆசிரியர்கள் அமைச்சுப்பணி பணியாளர்களின் வாரிசுக்கு 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கபடாமல் உள்ளது எனவே, நடைமுறையில் உள்ள பணி நியமனம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.அரசாணை எண். 151 பள்ளிக்கல்வி (SE1(1)) துறை நாள்: 09.09.2022-ன் படி பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாகம் மாற்றம் ஏற்பட்டு பணியாளர்களுக்கு 01.10.2022-ல் மாறுதல் வழங்கி ஆணையிடப்பட்டு 30,09,2025-ல் 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் பணியாளர்கள் நலன் கருதி அனைவருக்கும் அவரவர்களின் விருப்பத்தின்படி விருப்ப மாறுதல் வழங்கிய பின்னர் நிர்வாக மாறுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் நிரந்தர பணியிடத்தில் தொகுப்பூதியத்தில் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரவுக் காவலர் துப்புரவாளர் பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முன்னுரிமை நியமனம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வித்துறை நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *