501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம்
திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி பூஜை விழாவை முன்னிட்டு சாய்பாபா பக்தர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
இந்த பால்குடம் ஊர்வலமானது திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி மு தனியரசு மற்றும் கோவில் நிர்வாகிகள் விழா குழுவினர் கலந்து கொண்டு 501 பால் குடம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்
இந்த பால்குடம் ஊர்வலமானது திருவொற்றியூர் நெடுஞ்சாலை தேரடி மார்க்கெட் பகுதி வழியாக மங்கள வாத்தியம் மேளதாளம் முழங்க பெண்கள் நீண்ட வரிசையில் ஒரே நிறத்தில் சேலை அணிந்து ஊர்வலமாக சென்று சாய்பாபா கோவிலை சென்றடைந்து சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் சாய்பாபா பாடல்கள் மற்றும் சுலோகங்கள் ஜெபிக்கப்பட்டு மிக விமர்சையாக சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்
கோவில் நிர்வாகம் சார்பில் பால்குடம் எடுத்த அனைவருக்கும் பால் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது பின்னர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு ஏராளமான சாய்பாபா பக்தர்கள் ஏராளமானவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்