தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 26 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது
பள்ளி மாணவர்கள் தாளாளர் மற்றும் இல்ல தந்தை தாமஸ் லூயிஸ் மற்றும் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர்,. நாட்டு நல பணித்திட்ட அலுவலர் தேவதாசன். உதவி நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பார்த்திபன். ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் அரியலூர் மாவட்டம் வட வீக்கம் கிராமத்தில் உள்ள
தொன் பாஸ்கோ பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஆர் சி பாத்திமா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே சமூக சேவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுத்தும் விதமாகவும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வும் இளைஞர்களுக்கிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு தலைக்கவசம் சாலை விதிகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இந்தப் பேரணியில் மாணவர்கள் தலைக்கவசம் உயிர்கவசம் சாலை விதிகளை காப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் மழை நீரை சேகரிப்போம் என முழக்கங்களுடன் பேரணியில் ஈடுபட்டனர்
மண்ணை பாதுகாப்போம் மழை நீரை சேகரிப்போம் கருத்தரங்கு மற்றும் பாத்திமா அன்னை ஆலயத்தில் தூய்மைப்படுத்துதல் போதைப்பழக்கம் தடுப்பு குறித்து சொற்பொழிவு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் மாணவர்களுக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும் நடத்தப்பட்டது