அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி
கிராமமந்தையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக நாட்டாமை வீட்டில் இருந்து காப்பு கட்டுதல் அதன் பின்னர் ராஜா ராணி ஆட்டம் நடைபெற்றது
அன்று இரவு 1.00 மணியளவில் நாட்டாமை வீட்டில் இருந்து பூ பெட்டி மேளதாளத்துடன் அருகில் உள்ள சாத்தையார் ஓடையில் ஸ்ரீ காளியம்மன் கரகம் ஜோடித்து வானவேடிக்கை முழங்க சன்னதி வந்து அடைதல் அதன் பின்னர் கிராம இளைஞர்கள் சார்பாக அன்னதானமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
02.10.25.காலை 7.00 மணிக்கு மஞ்சள் நீராடல் 9.00 மணிக்கு முளைப்பாரி எடுத்து கம்மாக்கரை சென்றடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை எர்ரம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.