மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ் ஆகியோர் முன்னணியில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் சமூக சேவகர் அன்பு மணி, தலைவர் மீனா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.