கோவை ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில் 107 வது மஹா சமாதி விழா-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
ஷீரடி சாய்பாபாவின் மஹாசமாதி விழா ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள பாபா கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது,இந்நிலையில் கோவை பீளமேடு கல்கி நகரில் அமைந்துள்ள ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில் 107 வது மஹா சமாதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
இதில் சிறப்பு அபிஷேகம், ஹோமங்கள், ஆரத்திகள், பக்திப் பாடல்கள் மற்றும் சாயி சரித்திர பாராயணம் போன்ற சடங்குகள் நடைபெற்றன தொடர்ந்து பாபாவுக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இது குறித்து கோவில் நிர்வாகி சாய் ராஜலட்சுமி கூறுகையில்,ஒவ்வொரு ஆண்டும் பாபாவின் சமாதி தின விழா இங்கு நடைபெறுவதாக தெரிவித்த அவர்,இந்த ஆண்டு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்,மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்..
குறிப்பாக இங்கு உள்ள துனி எனும் அக்னி குண்டம் வருடம் முழுவதும் காட்சி தருவதாக கூறிய அவர்,இதனை வழிபடும் பக்தர்களின் பாவங்களையும்,கர்மாவில் ஏற.படும் துயரங்களையும் நீக்குவதாக தெரிவித்தார்..
சமாதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மகா அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்..