ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு உருமி மேளம் தப்பாட்டம் இசை வாத்தியங்களுடன் விரதக்குளம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வமாக பக்தி பரவசமுடன் பக்தர்கள் ஏராளமான கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து 108 பால்குடம் அக்னி சட்டி ஊர்வலமாக சென்ற பக்தர்கள் வாழ வந்த அம்மன் ஆலயம் சென்று தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினார்கள்
முன்னதாக மூலவர் செல்வவிநாயகர் வாழவந்த அம்மன் சுவாமிகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும்
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது