தர்மபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகிலுள்ள வெங்கடசமுத்திரம் மற்றும் பையர்நத்தம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சதீஷ், தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.முகாமில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக அளித்தார்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள்,கலைஞர் உரிமைத்தொகை
குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள்,பட்டா பெயர் மாற்றம் குடிநீர் இணைப்பு சாதி/வருமான/வாரிசு சான்றிதழ்கள் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு 40 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் முகாமில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமரன், சரவணன் உள்ளிட்டோர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.