திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று ( 02- ந்தேதி) நவராத்திரி திருவிழாவில் பத்தாம் நாள் விழாவில் மாலை 5 மணிக்கு அம்மன் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
மாலை 6 மணிக்கு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்பு போடும் நிகழ்வுக்கு வீதியுலா காட்சி புறப்பாடு நடைபெற்று, இதேபோல் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் அம்மன் ராஜ அலங்காரத்தில் அம்பு போடும் நிகழ்வுக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று,
ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ பெருந்தேவி தாயார் ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் அம்பு போடும் நிகழ்வுக்கு புறப்பாடு நடைபெற்று,
ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்தில் இருந்து ஸ்ரீ கோதண்டராமர் ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று இந்த நான்கு சுவாமிகளும் வலங்கைமான் – பாபநாசம் சாலையில் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து லாயம் பகுதியில் ஒரே இடத்தில் நான்கு சுவாமிகளும் சங்கமித்து அம்பு போட்டனர். இதனை காண அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை அந்தந்த ஆலயத்தின் உபயதார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.