ஸ்ரீ கன்னி முத்து அம்மன் கோவிலில் திருப்பணிகள் விறு விறு
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் குலால் வம்சம் ஸ்ரீ கன்னி முத்து அம்மன் கோவிலில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாட்டாறு வடகரையில் உள்ள சாக்கோட்டை சாலையில் இருந்து அய்யாவடி ரோடு பைபாஸ் இறக்கமான ஸ்ரீ கன்னி முத்து அம்மன் கோவிலில் உள்ளது.கோவில் வளாகத்தில் பாலகணபதி, முருகன் உள்ளிட்ட சன்னதிகள் அமைக்கப்படுகிறது. இக்கோவிலைப் பற்றி ஆலய நிர்வாகி ராஜு கூறியதாவது: குலால வம்சத்தில் பிறந்த ஸ்ரீ கன்னி முத்து அம்மன் குலால குலத்தாருக்கு குல தெய்வமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சிறப்பு வழிபடும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது.பிரதி அமாவாசை நாளான முதல் மூன்று நாட்களுக்கு ஆண்கள் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை வரம்,திருமணத்தடை ,தொழில் விருத்தி, கன்னி பெண்களின் சாபம் மற்ற பெண்களின் சாபமும் நீங்கும்.திருப்பணிகள் வேலை ஸ்தபதி லயன் விஜயன் தலைமையில் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் முடித்து கும்பாபிஷேகம் செய்ய உள்ளதாகவும்,பக்தர்கள் திருப்பணிக்கு நிதி உதவிகளும், தேவைக்கேற்ப கட்டுமான பொருட்கள் கொடுத்து அம்மன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.