திருவெற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடை அம்மன் கோவில் அதிமுக சார்பில் 5 மாவட்ட செயலாளர்கள் வடிவுடைய அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை 2000 பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக வேண்டி திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில்
அருள்மிகு வடிவுடையம்மன், ஆதிபுரீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகள் 46-நாயன்மார்கள், உள்ளிட்ட 400 தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அனிவித்து சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடந்து கழக அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் ஆர்.மனோ, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, மாவட்ட கழக செயலாளர்கள் மாதவரம் வி.மூர்த்தி, ஆர்.எஸ்.ராஜேஷ் தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன், ஆகியோர் அபிஷேக ஆராதனைகளில் அமர்ந்து 2026 தேர்தலில் கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு செய்து 2026 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நேதாஜி கணேசன், ஆர்.மதுரை வீரன், எம்.ஏ.சேவியர், ஸ்டீல் ரவிசந்திரன், பி.ராஜேந்திரன், அஜாக்ஸ் பரமசிவம், , உட்பட பலர் கலந்து கொண்டனர் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் அதிமுக 5மாவட்ட செயலாளர்கள் முக்கிய பிரமுகர்கள் வந்ததால் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர்