தென்காசி,
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் பெண்கள், மற்றும் பெண்குழந்தை களுக்கு எதிராக யூ டியூப்பில் காணொளி வெளியிட்ட நபரை சைபர் கிரைம் போலீசார்
கைது செய்தனர்.
ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவர் தனது யூடியூப் பக்கத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பதால் பெற்றோர் சோகத்தில் இருப்பதாவும், அதனால் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து பார்க்கும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாகவும் பேசி வீடியோ வெளியிட்டாராம்.
இது குறித்து சைபர் க்ரைம் இணையத்தில் புகார்கள் வந்த்தையடுத்து, தென்காசி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.