கரூர் செய்தியாளர் மரியான் பாபு


மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி..
கரூர் சுங்ககேட் பகுதிகள் அமைந்துள்ள திருமுருகன் மண்டபத்தில் கரூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் 30% தள்ளுபடி விலை செய்யபடுகின்றன. பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர்.

தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளித்துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெற்று கைத்தறி துணிகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் மூலம் மூன்று கோடி அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு, ஆரணி பட்டு, சிறுமுகை மென் பட்டு, நெகமம் காட்டன், மதுரை சுங்கடி காட்டன் சேலைகள் மற்றும் சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், நீலகிரி தோடர் எம்பிராய்டரி சால்வைகள் சென்னிமலை போர்வைகள், மாஃப்ளர்கள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் கரூர் மேட்கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பிரபலமான கைத்தறி ஜவுளிகள் ஒரே இடத்தில் 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சி 17.10.25 வரை நடைபெறும் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் மகாத்மா காந்தி புகைப்படத்துன் பட்டு நெய்யப்பட்டு அதனை காட்சிப்படுத்தினர். மேலும் பழமையான கைத்தறி இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டது.கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். இக்கண்காட்சியை
கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் துவக்கி வைத்தார்.உடன் கரூர் மாவட்ட கைத்தறித்துறை அதிகாரிகள்,ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *