கோவை கிளை சார்பாக கல்வி,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது
உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களை ஒருங்கிணைக்கும் விதமாக வேர்ல்டு மலையாளி கவுன்சில் செயல்பட்டு வருகிறது..
தொடர்ந்து சமூக நல பணிகளை செய்து வரும் இந்த அமைப்பு,சார்பாக சமூக முன்னேற்ற பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக (Shreshtta Sevana Pruskaram 2025)ஸ்ரேஷ்டே சேவன புரஸ்காரம் எனும் விருது வழங்கும் நிகழ்வு கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது..
வேர்ல்டு மலையாளி கவுன்சில் தலைவர் ராஜன் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சேர்மன் பிரதீப் நம்பியார் அனைவரையும் வரவேற்று பேசினார்..
கவுரவ விருந்தினர்களாக சர்வதேச தலைவர் பத்மகுமார்,வர்த்தக பிரிவின் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் கவிதாசன் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சமூக பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்..
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கவிதாசன்,சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு, குறிப்பாக கடினமான சூழ்நிலைகளில் சேவை செய்யும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களுக்கு , நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அவர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது உள்ளபடியே பாராட்டுகுரியது என புகழாரம் சூட்டினார்..
விழாவில் பேசிய முக்கிய விருந்தினர்கள் இது போன்ற விருதுகள், முன்கள பணியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, பிறருக்கு ஊக்கமளிக்கும் செயலாகவும் அமைவதாக தெரிவித்தனர்….
காந்தி பிறந்த நாளில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது பெருமை அளிப்பதாகவும்,வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்று நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி பணியாளர்கள்,ஆம்புலன்ஸ். ஓட்டுனர்கள்,செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்…
நிகழ்ச்சியில்,வேர்ல்டு மலையாளி கவுன்சில் கோவை கிளை பொருளாளர் வேணுகோபால், பொது செயலாளர் விஜயன் செருவஸேரி,
மலையாள திரைப்பட நடிகை கெலி ஜார்ஜ்,தன்னம்பிக்கை பேச்சாளர் மேத்யூ கோரா,நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சந்தியா மேனன் மற்றும் லேடீஸ் விங் சப்னா சுரேஷ்,உஷா மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…