திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் 11- ம்நாள் 03- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,

இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 11- ம்நாள் மண்டகப்படி உபயதாரர்கள் வலங்கைமான் எஸ்.கருப்பையா கொத்தனார் குமாரர்கள் & பேரன்கள் குடும்பத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்றுடன் நவராத்திரி திருவிழா இனிதே நிறைவுற்றது.

நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *