எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படும் நாட்டு நல பணி திட்ட மாணவர்களின் சிறப்பு சமூக சேவை திட்ட முகாம் ஆனது இன்றுடன் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று முடிந்தது.
இதனை முன்னிட்டு இன்று சமூக அக்கறையுடன் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணியை சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலை ப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் தாழந்
தோண்டி பகுதியில் இருந்து கடற்கரை வரை மாணவர்கள் மழை நீர் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை எடுத்தும், விழிப்புணர்வினை ஏற்படுத்த கோஷமிட்டு சென்றார்கள்,
இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.சுரேஷ் தலைமையேற்க,பள்ளி உதவி தலைமை ஆசிரியரும், நாட்டு நல பணி திட்ட அலுவலருமான தி. இராசேந்திரன் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக சீர்காழி ச.மு. இ.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றி, கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட என்.எஸ். எஸ். மாணவர்களும் பத்துக்கும் மேற்பட்ட தன்னார்வு தொண்டு மாணவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர் கேவரஓடை. கா. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக நடத்தினர் நிறைவாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் உ . செந்தில் குமார் நன்றி கூறினார்.