போடி அருகே 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நாகலாபுரம் விலக்கு 18 ஆம் கால்வாய் அருகே பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் தண்டபாணி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 18 ஆம் கால்வாயில் நீட்டிக்கப்பட்ட கடைமடை வரை உள்ள அனைத்து கண்மாய்களையும் நிரப்பிடக் கோரி தமிழக அரசையும் தேனி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பி கோரிக்கைகள் நடைபெற்ற கோரி வலியுறுத்தப்பட்டன
இந்த ஆர்ப்பாட்டத்தில் போடி நகர் பாஜக தலைவர் சித்ரா தேவி தண்டபாணி நகர பொது செயலாளர் எஸ் மணிகண்டன் மற்றும் நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊடக பாஜக நிர்வாகிகள் இந்த பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்