நெடுமி” திரைப்படம் 1990 காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த திரு M. வேல்முருகன் அவர்களின் அரிஷ்வர் புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் நெடுமி தயாரிக்கப்பட்டு பின்னர் சென்னையை சேர்ந்த எம் சுவாமிநாதன் அவர்களின் ஆர். வி. ஆர் ஸ்டுடியோல் திரைப்படத்தின் அனைத்து உரிமங்களையும் பெற்று தற்போது வருகிற 10th Oct 2025 அன்று வெள்ளித்திரையில் மோகித் சாய் என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் உலகம் முழுவதும் வெளியாகிறது.
எழுத்தாளரும் இயக்குனருமான நந்தா லக்ஷ்மன் இத்திரைப்படத்தை இயக்கியுளார். இப்படத்தில் புதுச்சேரியை சேர்ந்த கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ், AR.ராஜேஷ், கதாநாயகியாக அபிநயா, குழந்தை நட்சத்திரம் ஸரத்ராஜ், வாசுதேவன், ஆதவ்உலகம், ரவி, ராம்கி ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்.
மேலும் ‘ குட்டிப்புலி’ புகழ் ராஜசிம்மன் ‘கொம்பன்’ ப்ரீத்தி ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முழு கட்ட படப்பிடிப்பு மரக்காணம் அருகே உள்ள புதுப்பாக்கம் மற்றும் பாலக்காடு என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் இசை அமைப்பாளராக ‘ ஜாஸ் ஜேபி’ ஒளிப்பதிவாளராக ‘விஷ்வா மதி’ கலை இயக்குனராக ‘தினேஷ் டேவிட்’ இணை இயக்குனராக ‘ டிவி வசந்தன்’ படத்தொகுப்பாளராக ‘ராம் சரவணன்’ ஆகியோர்களை தொடர்ந்து பல புதுமுக நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
இத்திரைப்படதின் காட்சிகள் 1990 காலகட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது. முற்றிலும் அறிமுக கலைஞர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற ஒயிட் டவுன் பிலிம்ஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.