பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1983 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பா படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
கடந்த 1983 -85 ம் ஆண்டில் பிளஸ்2 வகுப்பு படித்த மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு அ.ஆ.மே.நி. பள்ளி தலைமையாசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துகொண்ட மாணவர்கள் தங்களை முதலாவதாக அறிமுகப்படுத்தி பேசினர். அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் பள்ளி வகுப்பறையில் நடந்த நினைவுகளையும் வெளிப்படுத்தி உணர்ச்சிகரமாக பேசினர்.
பலர் அக்கால கற்றல் முறையினையும் இக்கால கல்வி முறையையும் வேறுபடுத்தி பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.