சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வு
சுகா (SUKA) சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நோய் பாதித்தவர்களுக்கு நிதி உதவி சிறுநீரக நோய் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் செயல்படும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்…
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார நிலையில் பின்தங்கியோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அது தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்வதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்..
இந்நிலையில் இது போன்று சிறுநீரகம் தொடர்பான நோய்களில் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் வழங்கி வருகிறது..
மேலும் சிறுநீரக நோய் தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வரும் சுகா தன்னார்வ அமைப்பினர்,சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சைக்கான நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றனர்..
இந்நிலையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு 25 000 நிதி உதவியை சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் சேர்மன் ராஜன் ஆறுமுகம் வழங்கினார்..
வடவள்ளி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் துணை தலைவர் டாக்டர் காஜா மொய்னுதீன், ரோட்டரி கிளப் வடவள்ளி தலைவர் சரவணன்,சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சண்முகராஜ்,மற்றும் நிர்வாகிகள் வீரமணிகண்டன்,சரவண வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் குறித்து அதன் சேர்மன் ராஜன் ஆறுமுகம் கூறுகையில்,சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு தீர்வு காண்பது மற்றும் நிதி உதவிகளை வழங்க சுகா செயல்பட்டு வருவதாக கூறிய அவர்,குறிப்பாக கடுமையான சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறுதி-நிலை சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உதவிகளை சுகா செய்வதாக கூறினார்..
மேலும் . இந்த உயிர்காக்கும் சிகிச்சை முறையை செய்வதோடு,, டயாலிசிஸ் போன்ற சிகிச்சை முறைகளுக்கும் சுகா நிதி உதவி செய்வதாக தெரிவித்தார்..
மேலும் சிகிச்சைக்கு பிறகு வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள உள்ள மருந்துகளை குறைந்த விலையில் கிடைப்பதற்கான முயற்சியை சுகா மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்..
இதில் ரோட்டரி கிளப் வடவள்ளி,ரோட்டரி இண்டஸ்ட்ரியல் சிட்டி,ரோட்டரி சிறுவாணி,ரோட்டரி பிளாசம் உள்ளிட்ட கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..