சமயநல்லூர்.
மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி மற்றும் பாகப் பொறுப்பாளர்கள் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கலந்து கொண்டு பாக முகவர்,மற்றும் கிளைக் கழகச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட பொறுப்பாளர் அப்துல்சமது,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம்,தமிழரசன், மகேந்திரன்,நீதிபதி,ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன்,
கொரியர்கணேசன்,மாவட்டம் மகளிரணி செயலாளர் லெட்சுமி, துணை செயலாளர்கள் சாந்தி,மருதாயி,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அம்மு லோகேஸ்வரன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரகுபூபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, நிர்வாகி தங்கமுருகன்,சிறுவாலைசெல்வம்,அலங்காநல்லூர் வார்டு செயலாளர்கள் சுந்தரராகவன், சுந்தரராஜன்,ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சமயநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் நன்றி தெரிவித்தார்.