செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் தீயணைப்பு துறையின் சார்பாக மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி.
தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனரின் உத்தரவின்படி , இணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட அலுவலர் பி.லோகநாதன் அவரக்ளின் தலைமையில், மாதவரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துவீரப்பன், மணலி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் எம்.முருகானந்தம், ஆவடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பி.நாகராஜன், நிலைய போக்குவரத்துக்கு அலுவலர் தேவராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை நிகழ்ச்சியை தனியார் கல்லூரியில் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்வில் , திடீரென குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நுழைந்தால் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் எனவும் மாடியில் சிக்கி தவிக்கும் ஆண்களையும், பெண்களையும் எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியும் வீட்டில் சமையலறையில் தீப்பிடிக்க நேரிட்டால் அதனை எவ்வாறு கையாண்டு அதிலிருந்து தப்பிக்க முடியும் என செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும் மழைக்கால பேரிடரின் போது தீயணைப்புத் துறையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினர்.
இதில் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.