கீழகுடியிருப்பில் புதியநாடகமேடை திறப்புவிழா
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அ.காச்சன் ஊராட்சி கீழகுடியிருப்பு கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி2024-2025 கீழ் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் குத்துவிளக்குஏற்றி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் நயினார் கோவில் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சக்தி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ஒன்றிய கழகப் பொருளாளர் புலிகேசவன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், கிளைக் கழகச் செயலாளர் நடராஜன்,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.