கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் அண்ணா நகரில் அமைந்துள்ள காமாட்சி மண்டபத்தில் anti அகில இந்திய ஊழல் எதிர்ப்பு & விஜிலென்ஸ் கவுன்சில் மற்றும் இந்திய மனித உரிமைகள் கழகம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் விதமாக மாபெரும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாநிலத் தலைவர் முருகானந்தம் அவர்கள் முன்னிலை வகிக்க ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகிகள் சபரீஸ்வரன், அமிர்த கிருஷ்ணன், கணேசன், செந்தில்குமார், ஷாஜகான், நந்தகுமார், ஜெயக்குமார், சக்திவேல் அனைவரும் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.