தூத்துக்குடி மாநகர பகுதியில் காற்றாட்டு வௌ்ளம் தடுப்பு தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி கடந்த சில ஆண்டுகளாக பெய்த கனமழையால் கழுகுமலை கயத்தாறு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து காற்றாட்டு வெள்ளம் சாலை காடுகள் வழியாக மாநகர பகுதிக்குள் வந்த மழைநீரால் பொதுமக்கள் உள்பட பல தரப்பினா் பொிதும் பாதிக்கப்பட்டனா். அந்த பாதிப்பு இந்த ஆண்டு இல்லாத நிலை இருக்க வேண்டும் என்று மாநகர பகுதிக்குள் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை முறைப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் மடத்தூர் இரயில்வே தண்டவாளம் வழியாக பக்கிள்ஓடையில் வந்து இணையும் வழித்தடமான பசும்பொன்நகா், முத்துநகா் ஆசீர்வாத நகா் பாலையாபுரம் ஆகிய பகுதிகளில் கரையை பலப்படுத்தி தேவையற்ற கழிவுகளை அகற்றி தூா் வாரும் பணியை என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிெடட் சமுதாய பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் மேற்கொள்வதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா் வாரும் பணியை துவக்கி வைத்து நல்ல முறையில் முறையாக தண்ணீர் வழிந்தோடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிெடட் முதன்மை செயல் அதிகாாி ஆனந்த ராமானுஜம், துணை பொது மேலாளர் சரவணன், துணை முதன்மை மேலாளர்கள் ரகுபதி ராம்குமாா், கவுன்சிலா்கள் இசக்கிராஜா, கண்ணன், மாநகர வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் செல்வலெட்சுமி, மாணவரணி துணை செயலாளர் சத்யா, தொழிலாளா் அணி துணை தலைவர் செந்தில்குமாா் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்டச்செயலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், பொன்பெருமாள், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், செல்வம், அவைத்தலைவர் செல்வம், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பட், ஓய்வு பெற்ற எஸ்ஐ பொன்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பின்னா் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் 2025 2026 மேம்பாட்டு நிதியிலிருந்து மீன்வளக்கல்லூாி செல்லும் புதிய பாலம் 14.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதையும் திறந்து வைத்தாா். மீன்வளக்கல்லூாி முதல்வா் பொறுப்பு ஆதித்தன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம், மற்றும் ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.