எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செயலாளர்
பெரம்பலூர்.அக்.06.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம்(கிழக்கு) கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், காரை (கிழக்கு) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார் தலைமையிலும் 11.10.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.